Quantcast
Channel: Bharatkalyan97
Viewing all articles
Browse latest Browse all 11039

Happy New Autumn 2015 in the Hindu tradition

$
0
0
Autumn is a natural reckoner of annual time, a time of renewal evidenced by the forests जीवे॑म श॒रदः॑ श॒तं, तैत्तिरीय-आरण्यकम् ४-४२-५

Kalyanaraman

Here is a note by M. Jayaraman on this mantra.

पश्ये॑म श॒रदः॑ श॒तं, जीवे॑म श॒रदः॑ श॒तं, नन्दा॑म श॒रदः॑ श॒तं, मोदा॑म श॒रदः॑ श॒तं, भवा॑म श॒रदः॑ श॒तंँ शृणवा॑म श॒रदः॑ श॒तं प्रब्र॑वाम श॒रदः॑ श॒तम्, अजी॑ताः स्याम श॒रदः॑ श॒तं...।

 तैत्तिरीय-आरण्यकम् ४-४२-५


இந்த மந்திரம் (மந்திரத்தின் சில பகுதிகள்) ரிக்வேதம், ஶுக்லயஜுர்வேதம், அதர்வண வேதம் ஆகியவற்றில் காணக்கிடைக்கிறது. ரிக்வேதத்தில் தோன்றும் இந்த மந்திரத்தைக் கண்டு நமக்களித்தவர் - வஸிஷ்டர் என ஸாயண ஆசார்யர் தனது உரையில் தெரிவிக்கிறார்.

ஸாயணர் உரையைத் தழுவிய அர்த்தம் - 
நூறாண்டுகள் சூரியனைக் காண்போம் பஶ்யேம (கண்கள் போன்ற புலன்களின் சிறந்த இயக்கத்தினை சூரியனின் அனுக்கிரகத்தால் பெறுவோம்). நூறாண்டுகள் வாழ்வோம் ஜீவேம (சிறப்பாகச் செயல்படும் புலன்களை செயல்படுத்தி வாழ்வோம்.சோம்பித் திரியோம்). அவ்வாறு புலன்களைச் செயலில் முடுக்கி விடுவதனால் - நூறாண்டுகள் மகிழ்வோம் - நந்தாம. அதாவது - வாழ்கையை இன்பமயமாக்க வல்ல பொருட்செல்வத்தை அடைவோம். நூறாண்டுகள் களிப்படைவோம் -மோதாம. அவ்வாறு சம்பாதித்த பொருட்செல்வத்தை அனுபவிக்கும் வாய்ப்பை/ தகுதியை/திறனைப் பெறுவோம். இவையனைதையும் நாமிருக்கும் இடத்திலேயே (நம் நாட்டில்/ஊரில்) இருந்து கொண்டு செய்வோம் - பவாம. ஆன்ம போதத்தை அளிக்கவல்ல வேத சாஸ்திரக் கருத்துக்களை தகுத்ந்த ஆசிரியர்களிடமிருந்து கேட்போம் நூறாண்டுகள் ஶ்ருணவாம. அவ்வாறு கற்றுத் தேர்ந்த விஷயங்களை நூறாண்டுகள் போதிப்போம் - ப்ரப்ரவாம. இவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்துதோல்வியற்றவர்களாகத் திகழ்வோம் நூறாண்டு அஜீதா: ஸ்யாம.   
எனக்குத் தோன்றியது ....
இந்த மந்திரத்தில் நடுநாயகமாக விளங்குவது - பவாம என்பது. இதனை விளக்குகையில் ஸ்வ-ஸ்தானே என்கிறார் ஸாயணாச்சாரியர். இங்கு வேதம் தேசபக்தியை போதிக்கிறது. நம் ஊரை/ ஆருயிர் நாட்டை வளப்படுத்த நாம் இங்கு இருப்பது அவசியமல்லவா?
வேதம் - அனைதையும் துறந்து காட்டிற்குச் சென்று தவம் செய்வதைத் தான் போதிக்கிறது எனும் கருத்தை நந்தாம-மோதாம எனும் இரண்டு சொற்கள் தவிடுபொடி ஆக்குகின்றன.பொருட்செல்வம் ஈட்டவேண்டும். அதனை அனுபவிக்கவும் வேண்டும். வாழ்கையை இன்பமயமாக வாழுவதில் எந்தத் தவறும் இல்லை.
ஆனால், அதிலேயே மூழ்கிக் கிடப்பது வேத ரிஷிகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதனை - ஶ்ருணவாம-ப்ரப்ரவாம எனும் இரண்டு சொற்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆன்ம ஜ்ஞானத்தை அடைய கற்றல் மட்டும் போதாது, கற்பித்தலும் அவசியம் அன்றோ! (கற்ற அறிவினை பிறருக்கு போதிக்கும் போது தான் நமக்கு அது எந்த அளவுக்கு தெளிவாக உள்ளது என்பது தெரியவரும் அல்லவா?). போதிப்பவர்கள் அனைவரும் "எனது கற்றலை மேப்படுத்திக் கொள்ள நான் போதிக்கிறேன்"எனும் எண்ணத்தோடு போதித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
அஜீதா: ஸ்யாம - வாழ்வில் வெற்றி என்பது மேலே கூறிய விஷயங்களை கவனித்துச் செய்தால் உண்டாகும் எனத் தோன்றுகிறது. இன்பமும்-ஜ்ஞானமும் இரண்டும் ஒருங்கே இருக்கும் வாழ்க்கை அல்லவோ வெற்றிகரமான வாழ்க்கை.
மேலும், வாழ்வில் வெவ்வேறு கட்டத்தில் வெற்றி பெற்றவர் கூட எளிதில் வெற்றி கொள்ள இயலாதது ஒன்று உள்ளது. மரணம் தான் அது. மரணத்தை வெல்வது தான் உண்மையான வெற்றி. ஆன்மஜ்ஞானத்தை அளிக்கும் கற்றல், போதித்தல் ஆகிய செயல்களினால் மரணமற்ற, அமரர்களாகத் திகழ்வது தான் வாழ்வின் அனைத்துச் செயல்களின் குறிகோள் என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைக்கப்பட்டுள்ளது.
   
இந்த மந்திரம் தெரிவிக்கும் கருத்து அனைத்தும் மனிதனாக பிறந்த அனைவருக்கும் உகந்தது அன்றோ! அனைவரும் இந்தக் குறிக்கோளை ஏற்று நடந்தால் பூமி அமையின், வளத்தின் உறைவிடம் ஆகிவிடும் என்பதில் ஐயமேது!

தினமும் மாத்யான்ஹிக-அனுஷ்டானத்தில் இடம் பெறும் ஸூர்ய-உபஸ்தான- மந்திரத்தின் அங்கம் இது. வாழ்கையின் குறிக்கோளை இதைவிடத் தெளிவாக நித்தமும் நினைவுபடுத்த முடியுமா என்ன?  

Viewing all articles
Browse latest Browse all 11039

Trending Articles