Quantcast
Channel: Bharatkalyan97
Viewing all articles
Browse latest Browse all 11039

Destruction of DMK ongoing...Hopefully, India should be rid of false Dravidian spell in Tamil Nadu

$
0
0

திராவிட மாயை பாரத நாட்டிலிருந்து விலகட்டும்.


கல்யாணராமன் 

s. kalyana - chennai,இந்தியா
24-ஜன-201415:04:21 IST Report Abuse
s. kalyanaதிராவிட மாயை பாரத நாட்டிலிருந்து விலகட்டும் கல்யாணராமன்

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கம்: கருணாநிதியை காலை சந்தித்துச் சென்ற சிறிது நேரத்தில் அதிர்ச்சி அறிவிப்பு! By Sriram Senkottai, சென்னை

First Published : 24 January 2014 12:53 PM IST
திமுக தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்தவரும், மத்திய அமைச்சராக இருந்தவருமான மு.க.அழகிரி, திமுகவில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். திமுகவில் அவர் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு:
கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராய பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்ற நிலையில்; தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, கழக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க முயற்சித்தும் - திராவிட இயக்கம் தொடக்க முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச் சச்சரவுகள்; இயக்கத்திற்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி; தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தி.மு. கழகத் தோழர்கள் சிலர் மீது பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க, துணை போகிற துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும் - அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும் - அவர், தி.மு. கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். கழகத்தின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடிவான இந்தக் கருத்தினை, கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஏற்று, ஒற்றுமை யோடும், கட்டுப்பாட்டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். - என்று அன்பழகன் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த அறிவிப்பின் பின்னணியில் சில தகவல்கள் கட்சி மட்டத்தில் உலா வருகின்றன.
ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைப் பார்க்கலாம், ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு எஜமானர்களிடம் வேலை பார்க்க முடியாது - என்று மதுரை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும், ஜன.30ல் பிறந்த நாள் காணும் தென்னகத்து எஜமானே என்று அழகிரியை முன்னிறுத்தி மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
ஏற்கெனவே, மதுரை நகரில் போஸ்டர்கள் யுத்தம் பிரபபலம்தான். குறிப்பாக திமுக தரப்பில் ஒட்டப்படும் போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும். இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மதுரையில் போஸ்டர் ஒட்டிய அழகிரி ஆதரவாளர்களான முன்னாள் துணை மேயர் மன்னன், கவுன்சிலர் முபாரக் உள்பட 5 பேரை திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்தது திமுக தலைமை. இருப்பினும், அதையும் கண்டுகொள்ளாமல், அடுத்து ஒரு போஸ்டர் யுத்தத்தை அழகிரி ஆதரவாளர்கள் துவக்கியுள்ளனர். போஸ்டர் விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கிய நிலையில், இன்று காலை மு.க.அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று, இன்று அதிகாலை 2 மணிக்கு மு.க.அழகிரி சென்னை திரும்பினார். பின்னர் இன்று காலை 7 மணி அளவில் சென்னை கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் 45 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் தயாளு அம்மாளையும் மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். 8 மணி அளவில் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அழகிரி புறப்பட்டுச் சென்றார்.
இந்தச் சந்திப்பு குறித்து திமுக வட்டாரம் கூறுகையில், வெளிநாட்டுக்குச் சென்று வந்தது குறித்து கருணாநிதியிடம் மு.க. அழகிரி விவரித்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், தனது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அவர் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பியிருக்கலாம் என்றும், அவர்களை மீண்டும் கட்சியில் இடம்பெறச் செய்ய முயற்சி மேற்கொண்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், நேற்றும் மதுரை புறநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் மாவட்ட துணைச் செயலாளர் உள்பட 5 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை அழகிரி - கருணாநிதி சந்திப்பு நிகழ்ந்த நிலையில், மதுரையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது என்று இன்று காலை வரை கட்சித் தொண்டர்களிடம் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், திடீரென மு.க.அழகிரியே கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே தேமுதிகவுடன் கூட்டணி கனிந்து வராத சோகத்தில் கருணாநிதி ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட்டு கடின முயற்சிகளைச் செய்து வரும் நேரத்தில், அண்மையில் அழகிரி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தேமுதிகவுடன் திமுக கூட்டு வைத்தால் கட்சி உருப்படாது என்று போட்டுடைத்தார். இது கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதை அடுத்து, கருணாநிதியைச் சந்தித்து விளக்கம் அளிக்க அழகிரி முயன்றதாகவும், கருணாநிதி மறுத்ததாகவும்  முதலில் கூறப்பட்டது. இருப்பினும், பின்னர் அவர் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். இதன் பின்னர் சில நாட்களாக அடங்கிப் போயிருந்த விரிசல் விவகாரம், மீண்டும் மதுரை மாநகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் கட்சிக்குள் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கு, கட்சியில் காணப்படும் உட்கட்சிப் பூசலும் விரிசலும் தடையாக இருக்கக் கூடும் என்று கட்சி மட்டத்தில் எழுந்த கருத்துகள், அழகிரி நீக்கம் போன்ற முடிவு எடுக்கக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இன்று காலை நிகழ்ந்த சந்திப்பின் போது கூட, கருணாநிதி இத்தகைய கடின முடிவு குறித்து அழகிரியிடம் விளக்கி, சமாதானப் படுத்தியிருக்கக் கூடுமென்றும் பரவலாக கருத்துகள் எழுந்திருக்கின்றன.
இரு தினங்களுக்கு முன்னர், தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதற்காக, நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்ட திருச்சி சிவாவை திரும்பப் பெற்றுக் கொண்டு, அந்த இடத்தை தேமுதிகவுக்கு விட்டுத்தருவது குறித்து பரிசீலிப்போம் என்று அறிவித்தார் கருணாநிதி. மதுரையில் யார் பெரியவர் என்ற போட்டியில் இருக்கும் விஜயகாந்த் - அழகிரி போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்து, விஜயகாந்த்தை திமுக கூட்டணி பக்கம் இழுப்பதற்கு இப்போது தனது மகன் அழகிரியைப் பலிகடாவாக்கியிருக்கிறார் கருணாநிதி என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கெனவே ஒரு முறை கட்சியை விட்டு அழகிரியை நீக்கி ஒரு நாடகத்தை அரங்கேற்றிய திமுக தலைமைக்கு, இப்போது மீண்டும் ஒரு முறை அழகிரி வெளியேற்ற நாடகம், தேமுதிகவை தன் பக்கம் இழுக்கும் கணக்குக்கு ஒருவேளை உதவக்கூடும்! கருணாநிதி போடும் கணக்குக்கு விஜயகாந்தின் பதில் நடவடிக்கை எப்படி அமையும் என்பதைப் பொறுத்தே அழகிரி வெளியேற்ற நாடகம் வெற்றியா தோல்வியா என்பது தெரியவரும்!
http://www.dinamani.com
கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார் ; தி.மு.க.,வில் இருந்து அழகிரி நீக்கம்பதிவு செய்த நாள்
ஜன 24,2014 12:40சென்னை: கட்சி தலைமையுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் இருந்து வந்த கருணாநிதியின் மகனும், தென்மண்டல செயலருமான மு.க., அழகிரி இன்று கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுசெயலர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதால் தலைமைக்கழகம் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கட்சியின் நன்மைக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு அனைவரும் ஒற்றுமையுடன் , ஏற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி சமீபத்தில் கட்சியின் தே.மு.தி.க.,வுடனான கூட்டணி தொடர்பாக கட்சியின் தலைமைக்கு வேறுபட்ட கருத்தை வெளியிட்டார். இது கட்சி தலைவர் கருணாநிதிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அழகிரி ஆதரவாளர்கள் பொதுக்குழு கூடுவதாக ஒட்டிய ஒரு போஸ்டர் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் அழகிரி ஆதரவாளர்கள் மன்னன், முபாரக், உள்ளிட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.,வும் கூண்டோடு கலைக்கப்பட்டது.

இந்நிலையில் அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


'துரோகச்செயல்களில் ஈடுபட்டார் '-: கூட்டணி குறித்து அபிப்ராய பேதங்கள் மற்றும் எண்ணங்களை, தங்களின் கருத்துக்களை முறையிட கட்சிக்குள் பல்வேறு அமைப்புகள் இருந்தபோதும், இந்த அமைப்புகள் மதிக்காமலும், சிலர் தேவையற்ற விவாதமுறையற்ற விவாதங்களில், ஈடுபட்டு வந்தனர். மதுரையில் தி.மு.க., தோழர்கள் சிலர் மீது சாதி பிரிவினையின் கீழ் வழக்கு போட தூண்டி வந்தனர். இது போன்ற துரோகச்செயல்களில் ஈடுபட்டு வந்தது, இது கட்சிக்கு தவறான தோற்றத்தை தருவது போல் இருந்து வந்தது. சிலருடன் தொடர்பு கொண்டு கட்சி பணியாற்ற வேண்டாம் என்றும் முறையிட்டு கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் அழகிரி கட்சியில் நீடிப்பது முறையல்ல என்பதால் கட்சியின் கட்டுப்பாட்டை குலைத்து விடும். என்ற எண்ணத்தில் அவர் கட்சியில் இருந்து உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியின் இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒற்றுமையுடன் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து நிருபர்களிடம் பேசிய அன்பழகன், கட்சிகட்டுப்பாட்டை மீறியதால் இதனை காப்பாற்ற தலைமை கழகத்தின் எண்ணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

அழகிரி நீக்கப்படுவது 2 வது முறை : மதுரையில் தனது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அழகிரி கருணாநிதி இல்லத்திற்கு 2 முறை சென்று வந்தார். ஆனால் இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியே வராமலேயே இருந்து வந்தது. 

அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்படுவது என்பது இது 2 வது முறையாகும்.

பிறந்தநாள் விழா நடக்குமா ? வரும் 30ம் தேதி அழகிரி பிறந்த நாள் மதுரையில் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டிருந்த நேரத்தில் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருப்பது அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமைதி காத்திட அழகிரி வேண்டுகோள் ; கட்சியின் நடவடிக்கை குறித்து மதுரை தி.மு.க., தொண்டர்களுக்கு அமைதி காத்திடுங்கள் என அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க,வில் இருந்து அழகிரி நீக்கப்பட்டதும், அவரது மதுரை ஆதரவாளர்கள் பலரும் அழகிரியை தொடர்பு கொண்டனர். அப்போது அவர் தொண்டர்களிடம், அனைவரும் அமைதியாக இருங்கள் என்று மட்டுமே சொன்னாராம். தேர்தல் வருவதை கருதி அழகிரியும், ஸ்டாலினும் ஒருங்கிணைந்து செயல்பட கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக தொண்டர்கள் இன்று நிருபர்களிடம் கூறினர். 

நிருபர்களிடம் கருத்து சொல்ல அழகிரி மறுப்பு; அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அவரது கருத்தை அறிய அழகிரி மற்றும் அவரது நெருங்கிய வட்டாரங்களை பத்திரிகை நிருபர்கள் போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் மறு தரப்பில் போனை அட்டன்ட் செய்யாமல் தவிர்த்து விட்டார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=902560
Published: January 24, 2014 13:32 IST | Updated: January 24, 2014 14:05 IST

DMK suspends Alagiri

Special correspondent
M. K. Alagiri
The HinduM. K. Alagiri

The party also stripped Alagiri, South Zone secretary, of all party posts for violating party discipline.

Former Union Minister and the DMK's South Zone secretary M.K. Alagiri has been suspended from the party and has been relieved of his posts for violating party discipline.
"His continuation is inappropriate as it will further disrupt the party discipline," a statement from DMK general secretary K. Anbazhagan said on Friday.
Mr Anbazhagan called upon the partymen to remain united and support the decision as it was taken for welfare of the party organisation. The announcement came after Mr Alagiri called on his father and party president M. Karunanidhi and entered into an argument with him.
Mr Anbazhagan said Mr Alagiri had strongly criticised the action taken against those who had betrayed the interests of the party and indulged in unnecessary arguments.
"Mr Alagiri had also asked party cadres to keep away from organisational works and caused enormous trouble," Mr Anbazhagan added.
According to Mr Anbazhagan though there were properly elected bodies within the DMK to air grievances and resolve disputes, some partymen in Madurai had indulged in mudslinging against the leadership of a party -- DMDK leader Vijayakant -- that was interested in joining the DMK alliance.
The party took action against these partymen as they had sought to create an impression that the DMK was riddled with casteism and supporting the attempt to invoke Scheduled Caste and Scheduled Tribe (Prevention of Atrocities) Act against their own partymen to give vent to their ire.
"They were suspended from the party and Mr Alagiri strongly criticised this action and indulged in unnecessary arguments," Mr Anbazhagan said.
http://www.thehindu.com/news/national/tamil-nadu/dmk-suspends-alagiri/article5613717.ece

Karunanidhi cracks whip, suspends son Alagiri from all DMK posts

Express News Service | New Delhi | January 24, 2014 01:01
Earlier, incensed by wall posters,the DMK leadership had dissolved the Madurai urban district unit that swore allegiance to Alagiri.Two years ago, the DMDK had considered joining an alliance with the DMK but was put off by similar remarks by Alagiri. (PTI)Two years ago, the DMDK had considered joining an alliance with the DMK but was put off by similar remarks by Alagiri. (PTI)

DMK chief M Karunanidhi on Friday suspended son MK Alagiri from all party posts after the Madurai MP had opposed the party’s alliance with Vijaykant-led DMDK.

In a TV interview, Alagiri – a former Union minister- had said he did not consider Vijayakanth a politician and questioned the rationale behind forging an alliance with his party. This came at a time when the party, guided by his rival younger brother, M K Stalin, has been aggressively pursuing an alliance with the DMDK.

Two years ago, the DMDK had considered joining an alliance with the DMK but was put off by similar remarks by Alagiri. On Sunday, the day Alagiri’s latest interview was telecast, Vijayakanth recalled this while addressing his party’s general council, ostensibly as a message to the DMK high command.

Earlier, incensed by wall posters that rekindled the factional fire within,the DMK leadership had dissolved the Madurai urban district unit that swore allegiance to Alagiri

http://indianexpress.com/article/india/politics/karunanidhi-cracks-whip-suspends-son-alagiri-from-all-dmk-posts/
Chennai, January 24, 2014
Former Union minister MK Alagiri has been suspended from the DMK, the Tamil Nadu party headed by his father M Karunanidhi. Alagiri, 62, is the DMK chief's older son and has been involved in a prolonged tussle with his brother MK Stalin for control of the party. The tussle had intensified after the party chief had suspended five workers of the Madurai unit for putting up posters supporting Alagiri. But Alagiri had dissociated himself from the incident.
Five days before their suspension, the Madurai unit of the DMK was disbanded, again bringing into focus the Stalin-Alagiri succession row.
Alagiri had told Puthiya Thalaimurai, a Tamil news channel that except his father he would not accept anyone as the DMK chief. He had also said that a lot of decisions were taken by the DMK top brass without his congnisance.
Karunanidhi had then issued a statement warning anyone who acts against the party's discipline will be thrown out of the party.
Read: Alagiri: poster miscreants not his supporters
Alagiri’s supporters had been suspended in line with that warning. Karunanidhi had also issued a veiled warning to Alagiri and said that anyone flouting party discipline faces expulsion from primary membership.

http://www.hindustantimes.com/india-news/dmk-suspends-party-chief-karunanidhi-s-son-alagiri-for-creating-confusion/article1-1176223.aspx

Viewing all articles
Browse latest Browse all 11039

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>