Last Updated: Thursday, January 03, 2013, 16:35
Madurai: A petition has been filed in Madurai Bench of Madras High Court seeking to take action against a Tamil Nadu-based industrialist and officials of concerned ministries over his reported public claim that he had obtain clearance for his proposal to mine beach sand by paying bribe.
When the petition came up for hearing, Justice R.Subbiah ordered notice to Ministries of Environment and Forest and Mines, Chief Vigilance Commissioner and CBI and posted the case after two weeks.
Petitioner D Dhaya Devadas claimed that S Vaikundarajan, Managing Director of V V Minerals, openly admitted at a recent meeting of an Ore Panel, convened by Chemical Allied Products Export Promotion Council (CAPEXIL), that he gave "money" to officials of Environment and Forest Ministry and obtained the environment clearance for beach sand mining in Tuticorin District.
Stating that both himself and Vaikundarajan were members of CAPEXIL, the petitioner said the former made the "confession" during the meeting at a hotel in Chennai on November 12, 2010.
He claimed Vaikundarajan went ahead with his speech though Joint Director of CAPEXIL Suresh Babu cautioned that the proceedings were being recorded.
The petitioner, a partner in a mineral company, said those who received bribe for environment clearance should also be identified and brought to justice.
He submitted that despite him sending a representation to concerned officials, including Chief Vigilance Commissioner and CBI, along with transcripts of the CAPEXIL proceedings, no action had been taken.
PTI
http://zeenews.india.com/news/tamil-nadu/hc-notice-to-centre-on-plea-for-action-against-industrialist_820530.html
முறைகேடாக அனுமதி பெற்று வி.வி.மினரல்ஸ் நிறுவனம் குறித்து சி.பி.ஐ விசாரிக்கக்கோரி வழக்கு சி.பி.ஐ இயக்குநர் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
பதிவு செய்த நாள் : Jan 02 | 08:58 pm
மதுரை
முறைகேடாக அனுமதி பெற்று வி.வி.மினரல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், அதுகுறித்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ இயக்குநர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விதிகளை பின்பற்றாமல்...
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் தயாதேவதாஸ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–
வி.வி.மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன், கனிம வளத்துறை, புவியியல் துறை, வருவாய்த் துறை, தொழில் துறை ஆகிய துறைகளின் விதிகளை பின்பற்றாமல் சட்டவிரோதமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரை மணலை எடுத்து தாதுப்பொருட்கள் எடுத்து வருகிறார். கடற்கரை ஓரங்களில் மணல் எடுக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் கனிம வளத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும்.
பதில் மனு
வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தை பொறுத்தமட்டில் மாநில அரசின் அனுமதி மட்டுமே பெற்று உள்ளது. இதுதொடர்பாக ஒரு வழக்கு, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், வி.வி.மினரல்ஸ் நிறுவனம், டிரான்ஸ்வேல்டு கார்னைட் இந்தியா நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் 2003, 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே அனுமதி பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்
ரசாயனம் கலந்த ஏற்றுமதி கவுன்சில் மற்றும் இந்தியன் ரேர் எர்த் மூவர்(மத்திய அரசின் நிறுவனங்கள்) ஆகியவற்றின் கூட்டம் சென்னையில் நடந்தது.
இதில் உயர் அதிகாரிகள், வி.வி மினரல்ஸ், டிரான்ஸ்வேல்டு கார்னைட் இந்தியா நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர் வைகுண்டராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அரசிடம் இருந்து தடையில்லா சான்று பெற பல சிரமங்கள் இருப்பதாகவும், வழக்கமான நடைமுறையை கைவிட வேண்டும் என்றும், லஞ்சம் கொடுத்து தான் சுற்றுச்சூழல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் அந்த கூட்டத்தில் வைகுண்டராஜன் பேசி உள்ளார்.
அதுகுறித்த விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் கேட்டேன். பதிவு செய்யப்பட்ட டேப் அளிக்கப்பட்டது. முறைகேடாக அனுமதி பெற்று கடற்கரை ஓரங்களில் மணல் எடுத்து தாதுப்பொருட்களை எடுத்து வரும் வி.வி.மினரல்ஸ் நிறுவனம், டிரான்ஸ்வேல்டு கார்னைட் நிறுவனம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
http://www.dailythanthi.com/node/90119
தடையில்லா சான்று பெற லஞ்சமா? : வைகுண்டராஜனுக்கு எதிராக வழக்கு
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2013,00:55 IST
மதுரை: மத்திய அரசிடம் லஞ்சம் கொடுத்து தடையில்லா சான்று பெற்றதாக, ஒரு உயர்நிலை கூட்டத்தில், வி.வி.மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் பேசியதாகவும், சி.பி.ஐ., விசாரணை கோரியும் தாக்கலான வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
சென்னை வேளச்சேரி தயா தேவதாஸ் தாக்கல் செய்த மனு: நான், "பெங்கால்பே' நிறுவன உரிமையாளர். வி.வி.மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன். இவர், புவியியல் மற்றும் கனிம வளத்துறை, வருவாய்த் துறை, தொழில் துறை அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு, சட்ட விரோதமாக கடலோரப் பகுதிகளில் மணல் எடுத்து, கனிமங்களை பிரித்து எடுக்கிறார். இங்கு, கனிம குவாரிகள் நடத்த, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக அனுமதி தேவை. வைகுண்டராஜன் தொழில் நடத்த, மாநில அரசின் அனுமதி மட்டுமே பெற்றுள்ளார். நான் ஏற்கனவே ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தேன். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, வி.வி.மினரல்ஸ் மற்றும் டிரான்ஸ் வேல்டு கார்னட் இந்தியா நிறுவனங்களுக்கு 2003, 2006, 2007ல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என, பதில் மனு தாக்கல் செய்தனர்.
மத்திய அரசின் ரசாயனம் சார்ந்த தயாரிப்புகள் ஏற்றுமதி கவுன்சில் (கேபக்ஸில்), "இந்தியன் ரேர் எர்த் மூவர்ஸ்' நிறுவனம் சார்பில் சென்னையில் 2010ல் உயர்நிலை கூட்டம் நடந்தது. உயரதிகாரிகள் மற்றும் வைகுண்டராஜன் உட்பட தொழிலதிபர்கள் பங்கேற்றனர். நானும் பங்கேற்றேன். இதில் பேசிய வைகுண்டராஜன், தடையில்லா சான்று பெறுவதில் சிரமம் உள்ளது. இது தொடர்பான நடைமுறைகளை கைவிடும்படி, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். நான் பணம் கொடுத்து தான், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லா சான்று பெற்றேன் என, வெளிப்படையாக பேசினார். இந்த பதிவு செய்யப்பட்ட "டேப்'பை, தகவல் உரிமைச் சட்டம் மூலம் பெற்றேன். வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுக்குமாறு சி.பி.ஐ., இயக்குனர், தலைமை விஜிலன்ஸ் இயக்குனருக்கு புகார் செய்தேன். என் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி ஆர்.சுப்பையா முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் திலீப்குமார் ஆஜரானார். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், விஜிலன்ஸ் கமிஷனர், சி.பி.ஐ., இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=618818