CHENNAI: Born and bred in Sendamangalam town in Namakkal district, Ramamoorthi Jayaraj was a typical student. But 13 years after passing out of Madras Veterinary College in Vepery, Jayaraj, now a researcher with the Charles Darwin University, Australia, has bagged one of the most prestigious awards —The Pride of Australia medal.
The list of his contributions in the nomination files is extensive with cancer research and social work to educate the indigenous population of Australia’s Northern Territory. Jayaraj was one of 11 recipients of the medal this year, under the Inspiration category.
Jayaraj, while being recognised for his contributions to uplift the living conditions of the indigenous population, is primarily a biotechnologist. And it is in this field that he has made his most significant contributions.
Speaking to City Express from his desk in Charles Darwin University, the senior lecturer of clinical sciences spoke of his early experiences in India — both while schooling and in college.
“I was a typical student, but I was always good in academics. My father was a primary school teacher in the same town and after I finished my schooling in 1994, I began my undergraduate studies at Madras Veterinary College,” said Jayaraj.
Ramamoorthi Jayaraj | EXPRESSJayaraj’s journey toward the award began the minute he stepped into the MVC. He began filing research papers which got published even while he was an undergraduate. In fact, it was one of those research papers filed after his postgraduate stint at the same college which was picked up by a fellow researcher in Australia.
“He invited me to work at the CDU and I went. That was 13 years ago,” said Jayaraj. Once he began working at the Australian university, Jayaraj plunged fully into several clinical trials that were going on there. Most notably, in cancer research. Among the many in which his contributions have been recognised were those studying the effect of post-traumatic stress disorder (PTSD) in cancer patients and their family members. Other trials explored how best to map cancerous and non-cancerous areas using molecular markers, the effects of radiotherapy on cancer treatment etc.
“But during that time, I also began taking an interest in the indigenous population of the state. They have several similarities with Indians, in both culture and physiology. But they have been an oppressed people and their condition is not as good as it can be even now. I began working with them on the side,” he admitted.
He hopes the award will help promote the importance of health research and education in the Australian state.
Jayaraj currently works as a cancer researcher and educator for Australian Aboriginal and Tories Strait Islanders (an indigenous section of Australia’s population) in remote communities of Australia.
Pride of Australia Medal 2015 Northern Territory Award Ceremony finalists Andrew Warton, Belinda Marshall, Abbey Holmes, Lee-Anne Stallan, Bob Shewring, Mandy Hall, Kourtney Rimmer (8), Marieanna Hammond, Romola Sebastianpillai, Dr Rama Jayaraj and Steve Martz.
INSPIRATION
Dr Rama Jayaraj
A senior lecturer in Clinical Sciences and a cancer researcher at Charles Darwin University, Dr Rama has inspired his students through an integrated, case-based approach in unique learning environments. He has initiated partnerships with many Territory organisations that provide support for his students’ projects, made significant contributions to indigenous education and provided high-quality student support.
Senior Lecturer in Clinical Sciences Dr Rama Jayaraj with his 2015 Pride of Australia “Inspiration Medal” for the NT. Photo courtesy of NT News
A Charles Darwin University lecturer and cancer researcher has been recognised for his significant contribution to education in the Northern Territory in receiving the 2015 Pride of Australia “Inspiration Medal” for the NT.
Senior Lecturer in Clinical Sciences Dr Rama Jayaraj has made significant contributions to Indigenous education and provided high-quality student support, while contributing to cancer research.
“I am really honoured to receive the award,” Dr Jayaraj said. “There are so many committed health professionals and educators working hard in the NT. I am very humbled.”
Dr Jayaraj is an applied biotechnologist and has helped to strengthen research ties between CDU and institutions in India, Indonesia and Thailand. More recently he has been working on community engagement and cultural activities focusing on Australian Indigenous alcohol-associated assaults and violence.
“The whole team at the university is excited about the award,” he said. “We hope it helps to promote the importance of health research and education in the NT, strengthens existing collaborations and creates new ones.”
As a lecturer in pharmacology, pathophysiology and micro biology, he has been integral in leading his students through an improved and integrated, case-based approach to address their unique learning environments.
“Many of our students are nurses, who are mothers and also work full-time,” Dr Jayaraj said. “We have developed and adapted the delivery of our courses using e-learning tools to be more flexible in assisting students to meet their work and study commitments.”
The Pride of Australia “Inspiration Medal” is awarded by the NT News and the Sunday Territorian in the NT. It recognises a member of teaching professions from early childhood to university education or a role model whose compassion and wisdom while teaching, coaching and mentoring youth has been truly inspiring.
Earlier this year Dr Jayaraj received the Ryan Family Award for exceptional performance and contribution to CDU for his commitment to excellence in teaching and involvement in research with a global reach.
Shri Chandrasekhara Sarasvati, Mahaperiyava of Kanchi Matham discusses The Universal Religion
(HinduDharma: ) :
There is book containing photographs of the aborigines of Australia dancing in the nude (The Native Tribes of Central Australia, by Spencer Killan, pages 128 & 129). A close look at the pictures, captioned "Siva Dance", shows that the dancers have a third eyedrawn on the forehead.
ஒரு நாட்டின் மூலமான மக்களை சுதேசிகள் (Indigenous people) என்கின்றோம். மூத்தகுடிகள், பூர்வீகக்குடிகள் என்றும் சொல்லலாம். அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஆதிவாசிகள் (Aboriginals), தீவுவாசிகள் (Torres Strait Islanders) என்ற இரண்டு வகையான மக்களை அப்படிச் சொல்கின்றார்கள். இவர்களுக்கிடையே ஏராளமான வித்தியாசமான பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மொழியினைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.
அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் தொகையில் இவர்கள் 2% ஆவார்கள். இது ஏறக்குறைய 400,000. இதில் ஆதிக்குடிகள் 357,000. ஐரோப்பியர்களின் வருகைக்கு (1788) முன்னர் ஏறத்தாழ 600 - 700 இனக்குழுவினர் (tribal groups) இருந்திருக்கின்றார்கள். அப்போது ஏறக்குறைய 250 விதமான மொழியைப் பேசியிருக்கின்றார்கள்.
இதில் ஆதிக்குடிகள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவில் இருந்தும், தீவுவாசிகள் Torres Strait (400ற்கும் மேற்பட்ட தீவுகள்) இலிருந்தும் வந்தவர்கள் ஆவார்.
ஆதிகாலத்தில் அவுஸ்திரேலியாவும் ஆசியாவும் ஒன்றாக இருந்ததாகவும் (ஆழமற்ற கடல் பரப்பு இவை இரண்டையும் இணைத்திருந்தது) பின்னர் இவையிரண்டும் பிரிந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இற்றைக்கு 50,000 - 130,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தீவுகளிலிருந்து, இந்த ஆழமற்ற கடல்பரப்பினூடாக முதன்முதலாக அவுஸ்திரேலியாவிற்கு ஆதிக்குடிகள் வந்து சேர்ந்தார்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் அவுஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள கடற்கரையோரங்களில் முதலில் குடியேறினார்கள்.
விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, 56,000 - 78,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பெறப்பட்டுள்ளன.
சுதேசிகள் தாம் வாழ்ந்த இடங்களைக் கொண்டு பின்வருமாறு அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
Nyoogar (மேற்கு அவுஸ்திரேலியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ளவர்கள்)Murri (நியூ சவுத்வேல்ஷின் வடக்குப்புறம் மற்றும் குவீன்ஸ்லாந்தின் தென்கிழக்கு)Yolngu (Nothern Territory இன் வடக்குப்புற நிலமான Arnhem)Palawa (ரஸ்மேனியா - Tasmania)Nungah (தெற்கு அவுஸ்திரேலியா)Koori (நீயூ சவுத் வேல்ஸ்)Koorie (விக்டோரியா)
1770 ஆம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து கப்டன் ஜேம்ஸ் குக் என்பவர் தனது Endeavour என்ற கப்பலின் மூலம் Botany Bay என்ற இடத்தை வந்தடைந்தான். அதன்பிறகு 18 வருடங்கள் கழித்து குடியிருப்பதற்காக பிரிட்டனில் இருந்து வந்தார்கள். பழங்குடிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டன. சில பழங்குடிக்குழுக்கள் கொல்லப்பட்டனர். 1789 இல் பிரித்தானியமக்கள் கொண்டுவந்த சின்னம்மை மூலம் சிட்னியைச் சூழவிருந்த ஆதிக்குடிகள் கொல்லப்பட்டனர். ஒருபோதும் இந்த வருத்தத்தைச் சந்தித்திராத அவர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி இருக்கவில்லை.
ஆதிக்குடிகளின் பிள்ளைகள் அவர்களிடமிருந்து பலவந்தமாகப் (STOLEN GENERATION) பிரித்தெடுக்கப்பட்டார்கள். இந்தப்பிரித்தெடுப்பு 1970 ஆம் ஆண்டுவரை நடந்தது. எத்தனை பிள்ளைகள் இப்படிப் பிரித்தெடுக்கப்பட்டார்கள் என்ற சரியான தரவுகள் கிடைக்கவில்லை. தரவுகள் அழிக்கப்பட்டன, தொலைந்துவிட்டன. ஏறத்தாழ 1910 இலிருந்து 1970 வரை 10% ஆன பிள்ளைகள் பிரித்தெடுக்கப்பட்டார்கள்.
ஆதிக்குடிகளுக்கென ஒரு கொடி Harold Thomas இனால் உருவாக்கப்பட்டு 1971 இல் அடிலயிட்டில் (Adelaide) பறக்கவிடப்பட்டது. கொடியின் மேற்பகுதியான கறுப்பு நிறம் ஆதிக்குடிகளையும், கீழ்ப்பகுதியான சிவப்புநிறம் ஆதிக்குடிகளுக்கும் நிலத்துக்குமான தொடர்பையும், நடுவே இருக்கும் மஞ்சள் நிறத்திலான வட்டம் சூரியனையும் குறிக்கிறது. உலகைப் படைத்தவர்கள் முன்னோர்கள் எனவும், அவர்களே நிலத்தைப் படைத்து அதிலே மலைகள் ஆறுகள் மரங்கள் என்பவற்றை உருவாக்கினார்கள் எனவும் ஆதிவாசிகள் நம்புகின்றார்கள்.
டிடிஜிறிடு (Didjeridu) என்ற வாத்தியக்கருவியும் பூமராங்கும் (Boomerang) ஆதிக்குடிகளின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.
1960 ஆம் ஆண்டுவரையும் வாழ்வாதாரத்துக்கான (கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவை) உரிமைகள் மறுக்கபட்ட நிலையில் ஆதிக்குடிகள் இருந்துள்ளார்கள். 1965 ஆம் ஆண்டுமுதல் vote போடும் உரிமை பெற்றார்கள். 1967 முதல் குடித்தொகை மதிப்பீட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். 7 கோடி 618 இலட்சம் சதுர கிலோமீட்டரைக் கொண்ட அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் ஆதிவாசிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு 9 இலட்சத்து 20 ஆயிரம் சதுரகிலோமீட்டர்கள் ஆகும்.
1972 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தினத்தன்று, ஆதிக்குடிகள் கன்பராவில் உள்ள பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள Ngunnawal என்ற நிலத்தில் ஒரு கூடாரம் அமைத்து தமது கொடியைப் பறக்கவிட்டார்கள். 'அவுஸ்திரேலியா அரசு தங்களை ஒரு வெளிநாட்டுப்பிரஜைகள் போல நடத்துவதால், வெளிநாட்டு மக்களுக்கு இருக்கும் Embassy போல தங்களுக்கும் ஒன்று தேவை'என அறிவித்து அந்தக்கூடாரத்தை ஆதிக்குடிகளின் Embassy என அறிவித்தார்கள். அவுஸ்திரேலியா அரசு அதை அகற்றுவதற்கு முயற்சித்த போதிலும், அது மீண்டும் கட்டப்பட்டு 1992 முதல் நிரந்தரமாக அங்கே உள்ளது.
ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் ஏறக்குறைய 250 ஆதிக்குடிகளின் மொழிகள் (Alngith, Antakarinya, Bandjalang, Bayungu, Darling, Dirari, Iwaidja, Kamu, Kanju, Thawa, Yorta Yorta) இருந்தன. காலப்போக்கில் இவை அழிந்து கொண்டு வருகின்றன. ஆதிக்குடிகள் பேசிவந்த barramundi, billabong, boomerang, kangaroo, kookaburra, dingo, koala, wombat போன்ற பல சொற்கள் இன்று அவுஸ்திரேலியர்களின் ஆங்கிலச்சொற்களுடன் கலந்துவிட்டன.
2.
தமிழ்மொழியின் காலத்துக்கு சாட்சியாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள்(கிறிஸ்துவுக்கு முன் 31 ஆண்டு) போன்ற நூல்கள் உள்ளன.
இந்தப்பாடலின் மூலம் இன்றைய கன்னியாகுமரிக்குத் தெற்கே பறுளி ஆறும், பல மலைத்தொடர்களும், குமரிமலையும் கடலில் மூழ்கியது உறுதியாகின்றது. இங்கேதான் பாண்டியர் தலைநகரான மதுரை (இன்றிருக்கும் மதுரை வேறு) இருந்துள்ளது. இங்கேதான் முதற்சங்கம் இருந்தது. இந்த மதுரையும் கடற்கோளால் அழிந்தபின், கிழக்குக் கரையோரத்தில் இருந்த கபாடபுரம் பாண்டியரின் தலைநகராகியது. இங்கு இடைச்சங்கம் (இரண்டாம் தமிழ்ச்சங்கம்) உருவானது. இலக்கியங்கள் தோன்றின. பின்னர் இதுவும் அழிந்தபின்னர் கடலே இல்லாத வைகை நதிக்கரை மதுரை பாண்டியரின் தலைநகராகியது. கடைச்சங்கம் நிறுவப்பட்டது.
இந்துமாகடலை ஆய்வு செய்த ரஷ்யவிஞ்ஞானிகள் (Prof Bezrucov) வெளியிட்ட அறிக்கையில் ஆதிமனிதனின் பிறப்பிடமாகக் குமரிக்கண்டம் (Lemuria) இருக்கலாம் என்கின்றனர்.
Ice Age காலத்தில் கடல்மட்டம் 500 - 600 அடி தாழ்ந்திருந்தன. அப்போது ஜாவா, சுமாத்ரா ஆகிய நிலப்பரப்புகளும் நியூகினித்தீவுகளும் அவுஸ்திரேலியாவின் வடபகுதி நிலப்பரப்புகளும் மெல்லிய அளவில் இணைந்திருந்தன.
உலகின் தொன்மையான தமிழினத்திற்கும், அவுஸ்திரேலிய அபரிஜினல் இனத்திற்குமிடையே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அபரிஜினல் இனமக்களின் மொழி, கலாசாரம், பண்பாடு என்பவற்றுடன் உருவ அமைப்பும்கூட தமிழரோடு ஒப்புவமையாக உள்ளது. இந்தியாவின் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியபோது அங்கிருந்த தமிழினமக்கள் கிழக்கே அவுஸ்திரேலியாவிற்கும், மேற்கே ஆப்பிரிக்காவிற்கும் பரவினார்கள் என்பது செய்தி.
அவுஸ்திரேலியாவில் இப்போதும் கூட களரி ஆட்டம் எனப்படும் நடனம் உள்ளது. பழங்குடிகள் பலவகையான நடனங்களை ஆடுகின்றார்கள். நெற்றியிலே ஒரு கண்ணை வரைந்து கொண்டு, இவர்கள் ஆடும் அந்த ஆட்டத்திற்கு 'சிவா நடனம்' (Shiva Dance) என்று பெயர். உடல் எங்கும் மூன்று கோடுகளாக வெள்ளை வர்ணத்தைப் பூசிக்கொள்கின்றார்கள். நெற்றியிலே மாத்திரம் கிடையாகப் பூசிக்கொள்கின்றனர். Spencer, Killan என்பவர்கள் எழுதியுள்ள The Native Tribes of Central Australia (Dover Publications, Inc., New York, 1968) என்ற புத்தகத்தில் இதற்கானபுகைப்படங்கள் ஆதாரமாக (படங்கள் 128, 129 / பக்கங்கள் 621, 622) உள்ளன.
பண்டைய தமிழர்கள் ஓடித் தப்பிப்பவர்களைப் பிடிப்பதற்கு 'வளரி'என்ற ஆயுதத்தைப் பாவித்தார்கள். சங்க கால இலக்கியமாகிய புறநானூற்றுப் பாடலில் (பாடல் எண் 233) வரும் 'திகிரி'என்னும் பதம் இந்த 'வளரி'யையே குறிக்கின்றது.
'வளைதடி'என்று தமிழில் சொல்லப்படும் இந்த 'வளரி'என்ற ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது. இந்த வளரியைப் போன்று அவுஸ்திரேலியா ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம் 'பூமராங்' (boomerang) ஆகும். எனவே இந்த ஆயுதம் தமிழருக்கும் அவுஸ்திரேலியா ஆதிவாசிகளுக்கும் பொதுவானதாகின்றது. இது ஒருமுனை கனமாகவும் மறுமுனை இலேசாகவும் கூராகவும் ஒரு பிறை வடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படுகிறது. இதை ஆதிவாசிகள் ஒரு இலக்கை நோக்கி எறிவார்கள். இலக்கு தவறும் பட்சத்தில் அந்த பூமராங் எறிந்தவரின் கைகளுக்குத் திரும்பி வந்து விடும். இதை ஆதிவாசிகள் வேட்டையாடுவதற்கு உபயோகித்தார்கள்.
மத்திய அவுஸ்திரேலியாவில் இருந்த பழங்குடிகளின் பரம்பலைக் கீழேயுள்ள படத்தில் காணலாம். இந்த இனத்தின் பெயர்களாக (Tribes Names) - வாகை (Waagai), சிங்காலி (Chingali), இளம்பிறை (Ilpirra), வால்பாறை (Walpari), அருந்தா (Aruntha) போன்ற பெயர்கள் இருப்பதைக் காணலாம். Alice Springs போன்ற இடங்களில், சிறுசிறு குழுக்களாக பரந்தளவில் 'அருந்தா'இனக்குழுவினர் உள்ளனர். மேலும் இவர்கள் விலங்குகள், மரங்களின் பெயர்களைக் கொண்டும் வகைப்படுத்தப்படுகின்றனர். ஏமு மனிதன் (Emu man), கங்காரு மனிதர்கள் (Kangaroo man), பிளம் மர மக்கள் ('Plum tree' people) போன்றவறை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பழங்குடி மக்களின் பெரும்பாலான உரையாடல்களில் தமிழின் உச்சரிப்பைக் காணலாம். 'Ten Canoes'என்ற அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அபரிஜினல் மக்களைப் பற்றிய படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படலாம். அவர்கள் பாவிக்கும் சில சொற்களிற்கும் தமிழ்ச் சொற்களுக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம் (*பின்னிணைப்பு 1).
சிட்னியில் 'விண்மலே', 'காக்காடு'என இரு இடங்கள் இருக்கின்றன. ஆகாயமும் (விண்) மலையும் ஒட்டி நிற்பதைப் போல இருக்கும் அந்த அற்புதமான இடத்திற்கு Winmalle (விண்மலை) என்று பெயர். 'கா'என்றால் சோலை, காடு என்றால் வனம். உண்மையிலே சோலைவனம் போல ஏராளமானவர்களைக் கவர்ந்திழுக்கும் அந்த இடத்திற்கு Kakadu என்று பெயர் வழங்குகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் மதுர (Madura) என்று இன்னொரு இடம் இருக்கின்றது. இன்னொரு ஆதிவாசி இனம் அதிகம் பாவிக்கும் சொற்றொடர் 'பூனங்கா யிங்கவா'. அதன் அர்த்தம் 'பெண்ணே இங்கே வா'. 'பூ நங்கையே இங்கே வா'என்பதியே அவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்.
ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனிதர்கள் தெற்குப்பக்க கடற்கரை வழியாக வந்து இந்தியாவினூடாக அவுஸ்திரேலியாவை அடைந்திருக்கக்கூடும் என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகின்றது. இந்தக்கருத்தை இந்தியாவிலுள்ள Dr Raghavendra Rao என்பவருடைய ஆய்வு உறுதி செய்கின்றது. இவரது குழுவின் மனிதவர்க்கசாஸ்திர ஆய்வின்படி (Anthropological Survey), திராவிடப்பழங்குடிமக்களிற்கும் தற்போதைய அபரிஜினல் இனத்தவருக்கும் பொதுவான DNA மரபணு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவர்களின் கருத்துப்படி 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் அபோர்ஜினமக்கள் தென்னிந்தியா வழியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்து குடியேறியதாகவும், தற்போதைய அபரிஜினமக்களுக்கும் இந்தியக்குடிமக்களுக்கும் பொதுவான முன்னோர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்கள்.
1974 இல் Mungo Lake (NSW) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்றினை ஆராய்ந்தபோது அது இந்தியப்பழங்குடியினரின் சாயலை ஒத்திருந்ததாக விஞ்ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள்.
*பின்னிணைப்பு 1
Macquarie (Aboriginal words) என்ற புத்தகத்தில் உள்ளபடி.
Father - papa (Tor/17.2), paapaa(Ngi/2.2) - அப்பா Pg 622Mother - Ama (Tor/17.2) - அம்மா Pg 660Fire - thum (Wik/16.6) Pg 624Hill - Muli (Bun/1.7) மலை Pg 640Jaw - thakal (Ngi/2.1) தாடை Pg 646Leg - kar (Wem/6.1) கால் Pg 650Moon - pira (Diy/11.8) பிறை Pg 659Nose - Muruh (Bun/1.1) மூக்கு Pg 665Old Woman - aka (Tor/17.3) அக்கா Pg 666Person - arelhe (Arr/13.3) ஆள் Pg 671Thirsty - yarka (Paa/3.2) தாக Pg 705Sky - alkere (Arr/13.8) ஆகாயம், karkanya (Paa/3.8) ககனம் Pg 690Stone - karnu (paa/3.7), karul (Ngi/2.7) கல் Pg 698Tree - madhan (Wir/5.14) மரம் Pg 709Tease - ngaiyandi (Kau/8.27) நையாண்டி Pg 703You - nhii, nhe (Dat/12.33) நீ Pg 723Before - muna (Kau/8.25) முன்பு Pg 588Come - wara (wem/6.17), wapa (Paa/3.17) வா Pg 605Wind - yartu (Paa/3.8) காற்று Pg 720Face - mulha (Diy/7.1) முகம் Pg 621
2. Macquarie (Aboriginal words) - A dictionary of words from Australian Aboriginals & Torres Strait Islander - Nick Thieberger & William Mcgregor
3. The Native Tribes of Central Australia - Baldwin Spencer and Francis James Gillen, Dover Publications, Inc., New York, 1968 (Originally published by Macmillan & Co. Ltd, London in 1899)
4. வியக்க வைக்கும் தமிழர் அறிவியல் - மாத்தளை சோமு
5. ABC article 'DNA confirms coastal trek to Australia' by Nicky Phillips - 24.07.2009
ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் ஏறக்குறைய 250 ஆதிக்குடிகளின் மொழிகள் (Alngith, Antakarinya, Bandjalang, Bayungu, Darling, Dirari, Iwaidja, Kamu, Kanju, Thawa, Yorta Yorta) இருந்தன. காலப்போக்கில் இவை அழிந்து கொண்டு வருகின்றன. ஆதிக்குடிகள் பேசிவந்த barramundi, billabong, boomerang, kangaroo, kookaburra, dingo, koala, wombat போன்ற பல சொற்கள் இன்று அவுஸ்திரேலியர்களின் ஆங்கிலச்சொற்களுடன் கலந்துவிட்டன.